பணமோசடி புகார்... நடிகை மீது பைனான்சியர் மான நஷ்ட வழக்கு

By Shankar

Saipriya and Sri Ram Sharma
சென்னை: ரூ 25 லட்சத்துடன் திருமணத்தன்று ஓடிவிட்டதாக தன்மீது துணை நடிகை சாய்ப்ரியா தன் மீது பொய்யான புகார் கொடுத்ததாகவும், அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாகவும் சினிமா பைனான்ஸியர் ஸ்ரீராம் சர்மா கூறினார்.

ஜெய்சூர்யா, பேரின்பம் உள்ளிட்ட தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாய்பிரியா (36). சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார்திருநகர், நேரு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்தார்.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நங்கநல்லூர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ஸ்ரீராம் சர்மா (37) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர் ஒரு சினிமா பைனான்ஸியர். சாலிகிராமத்தி்ல் இவரது அலுவலகம் உள்ளது.

இவரிடம் ரூ 15 லட்சம் வாங்கியுள்ளாராம் சாய்ப்ரியா. ஆனால் அதைத் தராமல் இழுத்தடித்தாராம். தொடர்ந்து கேட்டதற்கு, தன்னை ஸ்ரீராம் சர்மா ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துவதாக கூற ஆரம்பி்த்துவிட்டாராம்.

இதுகுறித்து ஸ்ரீராம் சர்மா கூறியதாவது:

"எனக்கு சாய்ப்ரியா என்ற கலைவாணியை நேரடியாக தெரியாது. ஒரு நண்பர் மூலம் அவர் என்னைப் பார்க்க வந்தார். தனக்கு பண நெருக்கடி இருப்பதாகவும், ரூ 25 லட்சம் பணம் வேண்டும் என்றும் கூறினார். அவ்வளவு தர முடியாது என்று கூறிவிட்டேன். பின்னர் நண்பர் உத்தரவாதம் அளித்ததால்,ரூ 15 லட்சத்தை இரண்டு மூன்று தவணைகளாகக் கொடுத்தேன். மற்றபடி அவருக்கும் எனக்கும் காதல், கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தோம் என்று கூறுவதெல்லாம் முழுப் பொய்.

நான் பணம் கேட்க ஆரம்பித்ததுமே, அவர் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தார். இதோ அதோ என்று இழுத்தடித்தவர், ஒரு கட்டத்தில் தர முடியாது என்று கூற ஆரம்பித்துவிட்டார். என்னுடைய பணத்தை முழுவதுமாக ஏமாற்ற நினைத்த அவர் போலீஸாரிடம் பொய்யான புகார் கொடுத்துள்ளார்.

அவர் என்னிடம் பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இது பொய்யான புகார் என்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

சாய்ப்ரியாவால் நான் பட்ட வேதனைகளுக்காக அவர் மீது மானநஷ்ட வழக்கு போடப் போகிறேன்", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X