மே 24-ல் நடிகர் சங்கப் பொதுக்குழு
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வரும் 24-ம் தேதி நடிகர் சங்கப் பொதுக்குழு கூடுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு ரஜினி கமல் உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் 3 ஆயிரம் உருப்பினர்களுக்கும் தனித்தனியாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மே 24-ம் தேதி காலை 9 மணிக்கு நடிகர் சங்கத்தில் உள்ள சங்கரதாஸ் கலையரங்கில் இக்கூட்டம் நடைபெறும் என்றும் உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என்றும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நடிகர் சங்கத்துக்கு இப்போது தலைவராக நடிகர் சரத்குமாரும், பொதுச் செயலாளராக நடிகர் ராதா ரவியும் உள்ளனர்.
மீண்டும் தலைவராகத் தொடர விரும்பவில்லை என சரத்குமார் தெரிவித்துள்ளார். இதனால் புதிய தலைவர் ஒருமனதாகத் தேர்வாவாரா அல்லது தேர்தல் நடத்தப்படுமா என்பது பொதுக்குழு கூட்ட முடிவில் தெரிந்துவிடும்.
நடிகர் சங்கத்துக்கென புதிய கட்டடம் கட்டும் பணி ஆரம்பிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications











