twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அதிரடி தடை

    By Sudha
    |

    Thirumalai Nayakar Mahal
    மதுரையில் உள்ள புகழ் பெற்ற திருமலை நாயக்கர் மஹாலில் சினிமாக்காரர்கள் படப்பிடிப்புகளை நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.

    படப்பிடிப்புக்குரிய குறைந்த அளவிலான கட்டணத்தைக் கொடுத்து விட்டு அதை விட பல மடங்கு நாசத்தை ஏற்படுத்தி வைப்பது சினிமாக்காரர்களின் வழக்கமாகி விட்டது.

    இயற்கை எழில் கொ்ஞ்சும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த சோகக் கதை முடிவே இல்லாமல் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட எஸ்.ஏ.சந்திரசேகர் குழுவின் படப்பிடிப்பின்போது சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் நாசப்படுத்தி விட்டதாக அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மதுரையி்ல உள்ள புகழ் பெற்ற திருமலை நாயக்கர் மஹாலில் சினிமாப் படப்பிடிப்புகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மதுரை உயர்நீதி்மன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

    அதில், தொல்லியல் துறைக்கு வெறும் ரூ. 5000 கட்டணம் கொடுத்து திருமலை நாயக்கர் மஹாலில் படப்பிடிப்புக்கு செல்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட ரூ. 25,000 அளவுக்கு நாசத்தை ஏற்படுத்தி வைக்கின்றனர்.

    மிகவும் பழமையான, பாரம்பரியமான, வரலாற்றுச் சின்னம் மதுரை திருமலை நாயக்கர் மஹால். அதைப் பாதுகாக்க வகை செய்ய வேண்டும். எனவே அங்கு படப்பிடிப்புகளை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, படப்பிடிப்பு நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

    English summary
    Madurai bench of Madras HC has stayed film shootings in Madurai Thirumalai Nayakkar Mahal. Lawyer Muthukumar has filed a PIL against film shootings inside and outside of Mahal. He charged that, Mahal is a historical place. But these film units are damaging the place. HC also ordered to send notices to concerned depts.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X