»   »  கவர்ச்சி உடை... சோனாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

கவர்ச்சி உடை... சோனாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sona
பொதுவிழாக்களுக்கு கவர்ச்சி உடையில் வரும் பிரபல கவர்ச்சி நடிகை சோனாவைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

பிரபல கவர்ச்சி நடிகை சோனா. படத் தயாரிப்பாளராகவும் மாறியுள்ள இவரது லைஃப்ஸ்டைல் தத்துவமே தனி.

ஆண்களுடன் வாழ முடியாது என்றும், பெண்கள் பெண்களுடன் வாழ்வதில் தவறில்லை என்றும் கருத்துக் கூறி வருகிறார்.

அவரது இந்தப் பேட்டிகள் பேட்டிகள் கலாச்சாரத்துக்கு எதிராக உள்ளதாக இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

"நடிகை சோனாவின் நடவடிக்கைகள் தமிழ் பண்பாட்டுக்கு விரோதமாக உள்ளன. பொதுநிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சி உடையில் வருகிறார். முற்போக்குத்தனம் என நினைத்து கலாச்சாரத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகிறார்.

ஆணோடு வாழ முடியாது. ஆண் இல்லாமலும் வாழ முடியாது என்று பேசுகிறார். ஆண்களை நம்ப மாட்டேன். நண்பர்களை நம்புவேன் என்கிறார். பெண்களை சிகரெட் பிடிக்க தூண்டுகிறார். பார்ட்டிகளும் நடத்துகிறார். மேற்கத்திய கலாச்சாரத்தை திணிப்பதையே அவர் செயல்பாடுகள் காட்டுகின்றன.

எனவே சோனாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும். உடுமலையில் இந்து மக்கள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ரமணன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காதலர் தினம் கொண்டாடப்படுவதை எதிர்த்து வருகிற 13-ந்தேதி கடற்கரை கண்ணகி சிலை அருகில் மாநில செயலாளர் குமார் தலைமையில் நாளை மறுநாள் (13-ந்தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

காதலர் தினம் என்பது நமது பண்பாட்டுக்கு விரோதமானது. அதை தடை செய்ய வேண்டும். அன்றைய தினம் சில நட்சத்திர ஓட்டல்களில் பெண்களுக்கு இலவசமாக மது வழங்கப்படும் என அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. போலீசார் இதை அனுமதிக்கக்கூடாது. விதி முறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்".

-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

English summary
Hindu Makkal Katchi, a political outfit in Tamil Nadu condemn the sexy dress code of glamour actress Sona. The party will demonstrate this protest on Sunday, Feb 13 in Marina.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil