உதவி இயக்குநர்களை தரக்குறைவாகப் பேசி மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!!

By Sudha

Mysskin
உதவி இயக்குநர்களை தரக்குறைவாகப் பேசிய இயக்குநர் மிஷ்கின், அதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டார்.

திறமையான இயக்குநர் என்று பெயரெடுத்த மிஷ்கின், சமீப காலமாக தனது பேட்டிகளில் அனைவரையும் தாறுமாறாக விமர்சித்து வருகிறார். தனது நந்தலாலா படம் மட்டுமே தமிழின் சிறந்த படம் என்று கூறியுள்ள அவர், இதற்கு முன் இயக்கிய படங்களான சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகிய படங்களை கீழ்த்தரமான படங்கள் என்றும், இந்த மாதிரி கீழ்த்தரமான படங்களைத்தான் ரசிக்கிறார்கள் மக்கள் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கிடையில், சமீபத்திய பேட்டியொன்றில் உதவி இயக்குநர்களை தரக்குறைவாகவும், கீழ்த்தரமான வார்த்தைகளாலும் விமர்சித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த உதவி இயக்குநர்கள் சுமார் 50 பேர் நேற்று திரண்டு வந்து சென்னையில் உள்ள இயக்குநர் சங்கத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

உதவி டைரக்டர்களை இழிவுபடுத்தும் வகையில் பேட்டி அளித்த மிஷ்கின் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக மிஷ்கின், இயக்குநர்கள் சங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியதாகவும், அதில் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் சங்கத்தின் சார்பில் கூறப்பட்டது. ஆனாலும் மிஷ்கின் நேரடியாக மன்னிப்புக் கேட்டாக வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவருக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்றும் உதவி இயக்குநர்கள் எச்சரித்துவிட்டு கலைந்து சென்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X