twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமிதாப் வீட்டு முன் நாம் தமிழர் சார்பில் உண்ணாவிரதம்!

    By Sudha
    |

    Amitabh Bachchan
    மும்பை: நடிகர் அமிதாப் பச்சன் வீட்டின் முன்பாக நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக பல நூறுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இன்று காலை 10 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றன.

    கொழும்பில் ஐஃபா (IIFA) விருது வழங்கும் விழா வரும் ஜூன் 3 முதல் 5-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்வுக்கு சிறப்புத் தூதுவர் பொறுப்பை ஏற்றிருப்பவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.

    தனது போர் குற்றங்களை சர்வதேச பார்வையிலிருந்து மறைக்க இலங்கை செய்யும் முயற்சி இது என்றும், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து முடிந்து ஓராண்டு நிறைவுறும் தருணத்தில் தமிழரின் உணர்வுகளைக் காயப்படுத்தும் இலங்கையின் இத்தகைய கொண்டாட்டங்களுக்கு இந்திய கலைஞர்கள் துணை போகக் கூடாது என்றும் தமிழ் அமைப்புகள் கூறி வருகின்றன.

    ஏற்கனவே நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற அமிதாப் வீடு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விழாவுக்கு அமிதாப் செல்லமாட்டார் என்றும் கூறப்பட்டது.

    ஆனால் அண்மையில் சிங்கள அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, 'இந்த விழாவில் திட்டமிட்டபடி பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது' என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஐஃபா விருது வழங்கும் விழாவை இலங்கையில் நடத்த மாட்டோம் என அறிவிக்க வலியுறுத்தி நாம் தமிழர் இயக்கம் மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X