»   »  இன்று ஒரே நாளில் 11 படங்கள் ரிலீஸ்... ஒன்றாவது தேறுமா?

இன்று ஒரே நாளில் 11 படங்கள் ரிலீஸ்... ஒன்றாவது தேறுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
இன்று ஒரே நாளில் 11 படங்கள் ரிலீஸ்

சென்னை: இன்று ஒரே நாளில் தமிழில் 11 புதிய படங்கள் வெளியாகின்றன. மார்ச் 1-ம் தேதியிலிருந்து தமிழ் திரையுலகம் ஸ்ட்ரைக்கில் ஈடுபடக்கூடும் என்பதால், அதற்கு முன்பாக இருக்கிற சிறிய, நடுத்தரப் படங்கள் அனைத்தையும் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் இறங்கியுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று வெளியாகும் 11 படங்களின் விவரங்கள்:

மெர்லின், 6 அத்தியாயம், கேணி, ஏன்டா தலைல எண்ணை வைக்கல, காத்தாடி, பேய் இருக்கா இல்லையா, டொமினிக் வீடு, கூட்டாளி ஆகிய 8 நேரடி தமிழ்ப் படங்களும், அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன், போக்கிரி பையன், வெட்டாபுலி ஆகிய மூன்று டப்பிங் படங்களும் வெளியாகின்றன.

11 new releases releasing today

ஏற்கெனவே வெளியான படங்களில் நாச்சியார், கலகலப்பு 2 போன்றவை இன்னும் ஓடிக் கொண்டிருக்கின்றன. இன்று வெளியாகும் படங்களுக்கு பெரிய அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. கிடைத்த அரங்குகளில் போட்டவரை லாபம் என ரிலீஸ் பண்ணுகிறார்கள்.

English summary
Today there are 11 movies hit the screens all over the state.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil