தியேட்டர்களுக்காக முட்டி மோதும் தயாரிப்பாளர்கள்... இன்று ஒரே நாளில் 11 படம்!
சென்னை: இன்று மட்டுமே ஏழு நேரடி தமிழ்ப் படங்களும் நான்கு பிற மொழிப் படங்களும் தமிழகத்தில் வெளியாகின்றன. இதனால் தியேட்டர் பிடிப்பதில் பெரும் போட்டி நிலவுகிறது.
தீபாவளியை முன்னிட்டு பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் பார்த்துவிட்டன. இப்போது நடுத்தர மற்றும் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

கடந்த வாரம்
'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' , ‘ஜெய்ஹிந்த்-2' படங்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகின.

இந்த வாரம்
இந்த வாரம் ‘திருடன் போலீஸ்', ‘புலிப்பார்வை', 'விலாசம்', ‘முருகாற்றுப்படை', 'ஞானக்கிறுக்கன்', 'அப்புச்சி கிராமம்', அன்பென்றாலே அம்மா என தமிழில் ஏழு படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

திருடன் போலீஸ்
இவற்றில் திருடன் போலீஸ் படத்துக்கு மட்டும் 200 அரங்குகள் கிடைத்துள்ளன. மற்ற படங்கள் கிடைத்த அரங்குகளில் வெளியாகின்றன.

இந்தி
இந்தியில் எதிர்பார்ப்புகளை கிளப்பிய ‘கில் தில்' , மற்றும் ஆஸ்கருக்கு சென்றிருக்கும் ‘லையர்ஸ் டைஸ்' உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ளன.

ஆங்கிலம்
பாய்ஹுட் மற்றும் ஜான் விக் ஆகிய ஹாலிவுட் படங்களும் இன்று வெளியாகின்றன.


Click it and Unblock the Notifications











