வேளச்சேரியில் 11 திரைகள் கொண்ட புதிய சினிமா வளாகம்!
சென்னை: வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிமாலில் அதிநவீன 11 திரையரங்குகள் கொண்ட புதிய சினிமா வளாகம் தொடங்கப்பட்டுள்ளது.
லக்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த சினிமா வளாகத்தை எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனம் நடத்துகிறது (சத்யம் சினிமாஸ்).
11 அதிநவீன திரைகள் கொண்ட இந்த வளாகத்தில் மொத்தம் 2688 இருக்கைகள் உள்ளன. ஒவ்வொரு அரங்கும் 4கே டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

வசதிகள்
இந்த வளாகத்தின் முன்கூடம் இத்தாலி நாட்டு மார்பிள், வெல்வெட் சுவர் மற்றும் அழகிய விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முன்கூடத்தில் உணவகமும், 72 எல்சிடி திரைகள் கொண்ட தூணும் இடம்பெற்றுள்ளன. ஆண் பெண்களுக்கு தனித் தனி வாஷ்ரூம்கள் வைக்கப்பட்டுள்ளன.

பியானோ
முன்கூடத்தில் ஒரு அழகிய பெரிய பியானோ வைக்கப்பட்டுள்ளது. தானியங்கி ஐபாட் இதில் இணைக்கப்பட்டுள்ளது. எல்லா காலத்து பிரபல கலைஞர்களின் பியானோ இசையை இதில் கேட்டு ரசிக்கலாம்.

ஆர்டிஎக்ஸ்
ஒவ்வொரு இருக்கையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட துணியால் உருவாக்கப்பட்டுள்ளது. திரைகளில் 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய ஆர்டிஎக்ஸ் - 4கே டிஜிட்டல் புரொஜக்டர்கள் மற்றும் 2.4 கெய்ன் சில்வர் ஸ்கிரீன், டிஜிட்டல் சவுண்ட் என அதி நவீன திரை தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

டால்பி அட்மாஸ்
படம் பார்க்கும் அனுபவத்தை புதுவிதமாக்கும் டால்பி அட்மாஸ் ஒலி அமைப்பும் இந்த அரங்குகளில் நிறுவப்பட்டுள்ளது.
தானியங்கி இயந்திரங்கள் மூலம் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன.

மேலும் 5 அரங்குகள்...
இதுதவிர, வேளச்சேரியில் இன்னொரு சினிமா வளாகமும் இந்த மாதம் தொடங்கப்படவிருக்கிறது. அது கிராண்ட் மால் சினிமா. வேளச்சேரி மேம்பாலத்துக்கு அருகில் உள்ள இந்த மாலில் 5 தியேட்டர்கள் உள்ளன. இதனை பிவிஆர் நடத்துகிறது.


Click it and Unblock the Notifications











