பையனூர் வீடு விலைக் குறைப்பு-ராம.நாராயணன் அறிக்கை

இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் விடுத்துள்ள அறிக்கை:
சென்னை அருகே பையனூரில் 10 ஏக்கர் இடத்தில் தயாரிப்பாளர்கள் வீடுகள் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பத்து ஏக்கருக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் எளிய தயாரிப்பாளர்கள் கட்ட முடியாத அளவு இருந்ததால், தமிழக அரசிடம் முறையாக பேசி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவை தமிழக முதல்வர் கலைஞர் கனிவோடு பரிசீலனை செய்தார். அவருடைய அறிவுரையின்படி, மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்காக நிர்ணயித்துள்ள குறைந்த தொகையையே தயாரிப்பாளர்களுக்காக ஒதுக்கியுள்ள பத்து ஏக்கருக்கும் நிர்ணயித்து, தமிழக அரசு புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. இதற்காக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தயாரிப்பாளர்களுக்கு வீடுகள் கட்ட கடன் உதவி தேவைப்படுவதால், பல வங்கிகளில் முறையாக பேசப்பட்டு இரண்டு வங்கிகளில் கடன் உதவி பெறுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் தயாரிப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள். தமிழில் பெயர் சூட்டப்பட்ட திரைப்படங்களுக்கு வரிவிலக்கு சான்றிதழை அரசிடம் பெற்ற பின்பு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒப்புதல் பெற்று, பட வெளியீட்டு தேதியை ஊடகங்கள் வழியாக அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.'
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications