நாளை நடிகர் சங்க பொதுக்குழு - நிர்வாகிகள் பதவியேற்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடந்தது. ஆனால் இதில் சரத்குமார் தலைமையிலான அணியினரே மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
நடிகர் சங்க வரலாற்றில் போட்டியின்றி தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாளை நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் தி.நகர் இந்தி பிரசார சபா சாலையில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் நடைபெறுகிறது.
முற்பகல் 11 மணிக்கு கூடும் இக்கூட்டம் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தின்போது சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
பொதுக்குழு கூட்டத்தின்போது நடிகர் சங்கத்துக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளமும் தொடங்கி வைக்கப்படுகிறது.
Comments
actors association சரத்குமார் சினிமா தமிழ் நடிகர் சங்கம் பொதுக்குழுக் கூட்டம் cinema general body meeting sarath kumar


Click it and Unblock the Notifications