வழங்கப்பட்டது சம்மன்... ஆஜராவார்களா நயன் - பிரபுதேவா?

By Chakra

Prabhudeva and Nayanthara
சென்னை: ரம்லத் தொடர்ந்துள்ள இரு வழக்குகளிலும் ஆஜராகி நேரில் விளக்கமளிக்குமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த சம்மன் இன்று பிரபுதேவா மற்றும் நாயன்தாராவுக்கு தரப்பட்டது.

பிரபுதேவாவும் -நயன் தாராவும் திருமணத்துக்கு தயாராகி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபுதேவா மனைவி ரமலத் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, நயன், பிரபுதேவாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதையடுத்து இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. பிரபுதேவா தற்போது மும்பையில் ஒரு படப்பிடிப்பில் உள்ளார். எனவே அவரது சம்மனை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள பிரபுதேவாவின் தந்தையும், டான்ஸ் மாஸ்டருமான சுந்தரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டது.

நயன்தாரா வீடு கேரளாவில் உள்ளது. அவரது சம்மன் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை வருகிற 19-ந்தேதி மீண்டும் நடக்கிறது.

அப்போது இருவரும் கோர்ட்டில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இருவரும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கின் விசாரணையில், தன்னை மனைவி அல்ல என்று பிரபு தேவா மறுக்கக் கூடும் என்பதால், திருமணத்துக்கான ஆதாரங்கள் மற்றும் நயன்தாராவும் பிரபுதேவாவும் ஒன்றாக இருப்பதற்கான ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளார் ரம்லத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X