கோலிவுட் துணை நடிகை கடத்தல்?
சினிமா படப்பிடிப்புக்கு சென்ற துணை நடிகை மாயமானார். அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதால் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த காமாட்சியின் மகள் பூஜா என்ற யோகேஸ்வரி (21). சினிமா துணை நடிகையான இவர் தெனாவட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் கல்கி, மகள் உட்பட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த 30ம் தேதி தனக்கு சினிமா படப்பிடிப்பு உள்ளது என்றும், வர இரண்டு நாட்கள் ஆகும் என்றும் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார்.
ஆனால், வீடு திரும்பாததால் இவரது தாயார் காமாட்சி செல்போனில் அவரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடு்த்து காமாட்சி தனது மகளின் நண்பர்கள், படப்பிடிப்புக் குழு ஆகியோரிடம் விசாரித்தும் பலனில்லை.
இதற்கிடையே, பூஜாவிடமிருந்து அவரது தாயக்கு போன் வந்துது. அதில் பேசிய பூஜா, தன்னை சிலர் பிடித்து வைத்து இருப்பதாகக் கூறிவிட்டு விவரம் சொல்வதற்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
இதையடுத்து வளசரவாக்கம் போலீசில் கமாட்சி புகார் செய்தார்.
பூஜாவுக்கு சினிமா பட வாய்ப்பு வாங்கித் தரும் ஏஜெண்டிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, நான் பூஜாவை எங்கும் அழைத்துச் செல்லவில்லை என்று கூறிவிட்டார். அதே நேரத்தில் பூஜா தங்கள் வீட்டிற்கு வந்ததாகவும், பகல் முழுவதும் இருந்துவிட்டு மாலையில் சென்று விட்டதாக ஏஜெண்டின் மனைவி போலீசாரிடம் கூறியுள்ளார்.
பூஜா கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதால் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடக்கிறது.


Click it and Unblock the Notifications











