தயாரிப்பாளர் சங்கத்திற்கு இன்று தேர்தல்-ஓட்டுப் போட்டார் ரஜினி
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த், பார்த்திபன், குஷ்பு உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடந்தது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவசுப்ரமணியன் மேற்பார்வையில் தேர்தல் தொடங்கியது. திரைப்பட வர்த்தக சபையில் தேர்தல் நடந்தது. மாலை 4.30 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது.
தேர்தலில் நடிகர்கள் ரஜினிகாந்த், அவரது மகள் செளந்தர்யா ரஜினி, பார்த்திபன், குஷ்பு, இயக்குநர் கே.பாலச்சந்தர் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இரவு 7 மணி வாக்கில் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான முடிவு அறிவிக்கப்படுகின்றன.
செயற்குழு உறுப்பினர்களுக்கான முடிவு நாளை வெளியாகும்.
இந்த தேர்தலில் தற்போதைய தலைவர் ராம.நாராயணன் தலைமையில் ஒரு குரூப்பும், கேஆர்ஜி தலைமையில் இன்னொரு குரூப்பும் போட்டியிடுகின்றன.
வாக்குப்பதிவின் போது ரகளையில் யாரும் ஈடுபட்டு விடக் கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications











