ஆராக்ஷன் ரிலீஸையொட்டி அமிதாப், சைப் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

எந்தவித அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க ஆரக்ஷன் திரையிடப்படும் திரையரங்குகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சனின் பிரதீக்ஷா மற்றும் ஜல்சா பங்களா, சைப் அலி கான் வீடு மற்றும் பிரகாஷ் ஜா அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று கூடுதல்
கமிஷனர் விஷ்வாஸ் நக்ரே பாட்டில் தெரிவித்தார்.
ஆராக்ஷன் படம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் நாளை இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் படத்தை இரண்டு மாதங்களுக்கு தடை செய்வதாக மாயாவதி அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், படக் காட்சிகளில்
கடுமையான தணிக்கை முறையை பின்பற்றுமாறு சென்சார் போர்டுக்கு ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய கமிஷன் உத்தரவிட்டது.
இதனைத் தொர்ந்து இந்த கமிஷனைச் சேர்ந்த உறுப்பினர்கள் படத்தை நேற்று டெல்லியில் பார்த்தனர். ஆட்சேபணைக்குரிய காட்சிகளைக் குறிப்பிட்டுக் கொடுத்த கமிஷன்
உறுப்பினர்கள் அவற்றை நீக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறிவிட்டனர்.
மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அமைப்பின் தலைவரும் மராட்டிய மூத்த அமைச்சருமான சக்கன் புஜ்பால், இந்தப் படத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பற்றி மோசமாக
சித்தரித்திருப்பதாகக் கூறி, அந்தக் காட்சிகளையும் நீக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.
உபி அரசு இந்தப் படத்தை வெளியிடவே முடியாது என தீர்மானமாகக் கூறிவிட்டது. இரண்டு மாதங்கள் அவகாசம் தருகிறோம். அதற்குள் ஆட்சேபணைக்குரிய காட்சிகள்
அனைத்தும் நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அனுமதி கிடையாது என கூறிவிட்டது.
தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை இந்தப் படம் கேவலமாக சித்தரித்துள்ளது. இதுகுறித்த அரசு மற்றும் நீதிமன்ற
உத்தரவுகளை படத்தில் வரும் பல கேரக்டர்கள் கிண்டலடிக்கிறார்கள். இதை நிச்சயம் அனுமதிக்க முடியாது, என மாயாவதி அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தை தொடர்ந்து பஞ்சாபிலும் ஆராக்ஷனுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











