ஊர்வசியின் முன்னாள் கணவர் மனோஜ் கே ஜெயன் இரண்டாவது திருமணம்!

பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயன். இவர் தமிழில் தளபதி, தூள், திருமலை, ஜனா, திருப் பாச்சி, திருட்டுப்பயலே, வில்லு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மனோஜ் கே. ஜெயனும் நடிகை ஊர்வசியும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
சில வருடங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். இரு வருடங்களுக்கு முன் விவாகரத்தும் செய்து கொண்டனர். இவர்களுக்கு குஞ்சட்டா என்ற மகள் இருக்கிறாள். விவாகரத்துக்குப் பின்னர் ஊர்வசி திருமணம் செய்து கொள்ளவில்லை. தனித்து வாழ்கிறார்.
தற்போது மனோஜ் கே. ஜெயன் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இரு தினங்களுக்கு முன் திருச்சூரில் ரகசியமாக நடந்தது இந்தத் திருமணம். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். மலையாள - தமிழ் நடிகர், நடிகைகள் யாரும் இந்த திருமணத்துக்கு அழைக்கப்படவில்லை!


Click it and Unblock the Notifications











