ரூபினா அலிக்கு உதவிய வானம் யூனிட்!
ஸ்லம்டாக் மில்லியனேர் மூலம் வெளிச்சத்துக்கு வந்த குழந்தை நட்சத்திரங்களில் ஒருவர் ரூபினா அலி.
மும்பையின் பாந்த்ரா குடிசைப் பகுதியில் இவரது வீடு இருந்தது. சமீபத்தில் நடந்த பெரிய தீ விபத்தில் இவரது குடிசையும் சாம்பலானது. குடிசைக்குள் இருந்த எல்லாவற்றையுமே இழந்துவிட்டாராம் ரூபினா.
தங்களுக்கு அரசு ஏதாவது உதவி வழங்க வேண்டும் நேற்று முழுக்க பாந்த்ரா குடிசைவாசிகள் போராட்டம் நடத்த, அவர்களுடன் இணைந்து குரல் கொடுத்தார் ரூபினாவும்.
இந்த நிலையில், மும்பையில் படப்பிடிப்பிலிருந்த வானம் பட தயாரிப்பாளரும் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரிக்கு இந்த விஷயம் தெரிய வந்தது.
உடனடியாக ரூபினா அலியை வீனஸ் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்துக்கு வரவழைத்த தயாநிதி, தனது வானம் யூனிட் சார்பில் ரூ 50000 ரொக்கமாக வழங்குவதாக அறிவித்தார். இதனை படத்தின் ஹீரோ சிம்பு அந்த சிறுமிக்கு வழங்கினார்.
இதைக் கண்ட வீனஸ் நிறவன உரிமையாளர் சம்பக் ஜெயின், தனது பங்காக ரூ 21000 ஐ வழங்கினார். வானம் பட ஆடியோவை வீனஸ் நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது!


Click it and Unblock the Notifications











