விருதகிரி படத்தின் எடிட்டர் சலீம் திடீர் மரணம்!
விஜயகாந்த் நடித்த விருதகிரி படத்தின் படத்தொகுப்பாளர் சலீம் திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 38.
சூரன், பவானி உள்பட சில படங்களில் பணியாற்றியவர் சலீம். விஜயகாந்த் முதல்முறையாக இயக்கி நடித்து திரைக்கு வந்துள்ள படம் விருதகிரி. இந்தப் படத்தின் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார் சலீம். மூளைக்கட்டி நோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக இரவு பகலாக படங்களின் எடிட்டிங் பணிகளில் தீவிரமாக இருந்தபோது அவருக்கு மூளையில் ரத்தக் குழாய் வெடித்ததாகவும், இதனால் மயங்கிவிழுந்த அவர் மருத்துவமனையில் சேர்த்தபோது நேற்று முன்தினம் உயிர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் விருதகிரி வெளியீட்டுப் பரபரப்பில், சலீம் மரணம் குறித்த செய்தி கூட யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது.
நேற்று மாலை சலீமின் உடல் தகனம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











