For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சூர்யாவின் அயன் ரிலீசாகி 11 வருஷம் ஆகிடுச்சு.. டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்.. அயன் 2 சாத்தியமா?

  |

  சென்னை: விழி மூடி யோசித்துப் பார்த்தால்.. அயன் படம் ரிலீசாகி அதுக்குள்ள 11 வருஷம் ஆகிடுச்சா? என்ற ஷாக் தான் பலருக்கும் ஏற்படும்.

  எஸ்எஸ் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிகர் விஜய்.. இன்றைய டாப் 5 பீட்ஸிஸ்!

  இப்போது பார்த்தாலும், பல புதுப்படங்களுக்கு சவால் விடும் வகையில், அத்தனை நேர்த்தியாகவும் ஹை டெக்காகவும் அந்த படம் இருக்கும்.

  கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா கூட்டணியில் வெளியான அயன் படம் 11 வருஷம் கடந்ததை சூர்யா ரசிகர்கள் #11YearsOfAyan என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

   கறுப்பு நிற ஜிம் சூட்டில் பளிச்சென தொப்புளை காட்டிய நடிகை..இருளும் நிலவும் என ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்! கறுப்பு நிற ஜிம் சூட்டில் பளிச்சென தொப்புளை காட்டிய நடிகை..இருளும் நிலவும் என ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

  தேசிய விருது ஒளிப்பதிவாளர்

  தேசிய விருது ஒளிப்பதிவாளர்

  இந்தியாவின் பிரபல ஒளிப்பதிவாளராக இருந்த கே.வி. ஆனந்த், இயக்குநர் ஷங்கரின் முதல்வன், சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.சி. ஸ்ரீராமின் உதவி ஒளிப்பதிவாளராக இணைந்த கே.வி. ஆனந்த், 1994ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான தென்மாவின் கொம்பத் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவுக்காக தேசிய விருதை வென்றார்.

  11 வருஷம்

  11 வருஷம்

  பி.சி. ஸ்ரீராம், இயக்குநர் ஷங்கர் என பெரிய ஆளுமைகளுடன் பயணம் செய்த கே.வி. ஆனந்த், கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆனால், சூர்யாவுடன் இணைந்து 2009ம் ஆண்டு கே.வி. ஆனந்த் இயக்கிய அயன் படம் தான் அவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டரை கொடுத்தது. இன்றுடன் அயன் படம் வெளியாகி 11 வருஷம் ஆகிவிட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  நோ ஹேட்டர்ஸ்

  கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா, பிரபு நடிப்பில் வெளியான அயன் படத்திற்கு தமிழ் சினிமாவில் ஹேட்டர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு, அஜித், விஜய் ரசிகர்களும் அந்த படத்தை ரசித்துப் பார்த்தனர். ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வைத்தும், டீட்டெய்லிங் பிடித்தும் கே.வி. ஆனந்த் மிரட்டி இருந்தார்.

  எபிக் சீன்

  திருட்டு விசிடியில் இருந்து, வைரங்களை கடத்துவது வரை என பல விஷயங்களை மிகவும் நுட்பமாக ஆராய்ச்சி செய்து செம விவரமாகவும் விரிவாகவும் கே.வி. ஆனந்த் அயன் படத்தை எடுத்து இருப்பார். அதிலும், தலை முடியில் வைத்துக் கொண்டு வைரத்தை கடத்தி வரும் காட்சி செம மாஸ் என பல ரசிகர்களாலும் பாராட்டப் பெற்றது.

  எக்கச்சக்க கெட்டப்

  அயன் படத்தின் இன்ட்ரோ பாடல் ஒன்றுக்காக ஏகப்பட்ட கெட்டப்புகளை போட்டு நடிகர் சூர்யா நடித்திருப்பார். பெண் வேடம், பேரழகன் வீடியோ, வாரணம் ஆயிரம் தாத்தா, கிரிக்கெட் வீரர் என அனைத்தும் கச்சிதமாக பொருந்தியிருக்கும். ஷங்கரை தொடர்ந்து ஒரு பாட்டுக்காக இந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் மெனக்கெடுவது என்றால் அது இயக்குநர் கே.வி. ஆனந்த் தான்.

  ஹாலிவுட் தரம்

  தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்துக்கு கொண்டு சென்ற படமாக அயன் அறியப்பட்டு சூர்யா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் வெளியான அன்பே அன்பே, விழி மூடி யோசித்தால், பள பளக்குற பகலா நீ என அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் தான்.

  அயன் 2 சாத்தியமா?

  சூர்யா - கே.வி. ஆனந்த் கூட்டணியில் அயன் படத்தைத் தொடர்ந்து உருவான மாற்றான், காப்பான் படங்கள் பிரம்மாண்டமாக இருந்தாலும், அயன் பட அளவுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கவில்லை. அயன் படத்தின் 11 வது வருஷத்தை கொண்டாடும் ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு, அயன் 2? படம் உருவாக வேண்டும் என்பது தான்.

  English summary
  Suriya fans trends #11YearsOfAyan hashtag in twitter. KV Anand, Suriya combo for the first time will give a everlasting blockbuster to Suriya.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X