ஆரம்பிக்கலாங்கலா...இன்னும் 12 மணி நேரம் தான்...எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விக்ரம் டீம்
சென்னை : இன்னும் 12 மணி நேரம் தான் என போஸ்டர் வெளியிட்டு விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை படக்குழு அதிகரித்து வருகிறது. இதையும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கலாய்த்தும், கொண்டாடியும் வருகின்றனர்.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் விக்ரம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமலுடன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, நரேன்,மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நாளை விக்ரம் ரிலீஸ் தேதி
இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பாளர்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிலீஸ் தேதி அறிவிப்பிற்கே தேதி அறிவித்து எதிர்பார்ப்பை எகிற வைத்தனர். டைரக்டர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான மார்ச் 14 ம் தேதி காலை 7 மணிக்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.

எதிர்பார்ப்பை எகிற வைக்கிறாங்களே
ரிலீஸ் தேதி அறிவிப்பை முன்னிட்டு நேற்று, Once upon a time theere lived a glost என்ற வாசகத்துடன், கமலின் பாதி முகம் மட்டும் தெரிய, கையில் பெரிய வாளுடன் கமல் இருப்பது போன்ற வீடியோ க்ளிம்ப்ஸ் ஒன்றை வெளியிட்டனர். அதோடு, சில ஆக்ஷனுக்கு தயாராகுங்கள்...விக்ரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு மார்ச் 14 காலை 7 மணி என ட்விட்டரில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் வெளியிட்டது.

ஆரம்பிக்கலாங்கலா
இதைத் தொடர்ந்து இன்று, செந்நிற போஸ்டரில் ஆரம்பிக்கலாங்கலா...12 மணி நேரம் தான்...விக்ரம் என எழுதப்பட்ட போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதனால் எந்த தேதியில் அப்படி படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்கள். இப்படி எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார்கள் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதே சமயம் இதை வைத்தே பலர் கலாய்த்தும் வருகின்றனர்.

ரிலீஸ் தேதிக்கு இவ்வளவு அக்கபோரா
ரிலீஸ் தேதிக்கு இவ்வளவு அக்கபோரா ஆண்டவரே...அதான் ஆண்டவர். ஏப்ரல் 13 ன்னு போட்டு விடுங்க. மாஸா இருக்கும். க்ளிம்சா இல்ல மோஷன் போஸ்டரா இல்ல லுக் மட்டும் தானா. க்ளிம்ஸ் தான் வெளியிட போறாங்க போல அது தான் இப்படி பண்ணிட்டு இருக்காங்க. ஒரு ரிலீஸ் தேதிக்கு இவ்வளவு பில்ட்அப்பா...ஏதோ டீசர், டிரைலர் வரமாதிரி இருந்தா கூட ஓகே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அதோடு போஸ்டரா வெளியிட்டது போதும் ஒரு க்ளிம்ஸ் அல்லது வீடியோ வெளியிடுங்க என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











