5 ஏக்கர் நிலத்தை மாஜி திமுக எம்.எல்.ஏ. அபகரித்து விட்டதாக குட்டி பத்மினி மகள் புகார்

By Sudha

Keerthana
சென்னை: திருத்தணி தொகுதி முன்னாள் எம்எல்ஏ இ.சிவாஜி தங்களுக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக நடிகை, டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குட்டி பத்மினியின் மகள் கீர்த்தான காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

தனது தாயாருடன் கமிஷனர் ஜே.கே. திரிபாதியை சந்தித்து கீர்த்தனா இந்தப் புகாரைக் கொடுத்தார். கீர்த்தனாவும் ஒரு நடிகைதான் காதலே சுவாசம் என்ற படத்தில் நடித்தார். பின்னர் அவர் சரிவர நடிக்கவில்லை.

கமிஷனரை சந்தித்து கீர்த்தனா கொடுத்த புகாரில்,

எனது தாயார் குட்டி பத்மினி. பிரபல நடிகை. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரைப்படத் துறையில் பல வருடம் இருந்துள்ளார். டிவி தொடர்களையும் தயாரித்துள்ளார்.

எனக்கு 2 சகோதரிகள் உள்ளனர். 1994ம் ஆண்டு கும்மிடிபூண்டியில் உள்ள மாதர்பாக்கம் கிராமத்தில் எனது பாட்டியின் பணத்தில் 5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அதில், ஒரு ஏக்கர் நிலம் எனது தாயார் பெயருக்கும், ஒரு ஏக்கர் நிலம் எனது பெயரிலும் மீதமுள்ள நிலம் எனது சகோதரிகள் பெயரிலும் மாற்றப்பட்டது.

இதற்கிடையில், எனது தாயாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து முன்னாள் திமுக எம்எல்ஏ மற்றும் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் திமுக மாவட்ட செயலாளருமான இ.சிவாஜியிடம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கடனாக பெற்றார். அது வட்டியுடன் சேர்த்து ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் ஆகிவிட்டது. எனவே, பணத்தை திரும்ப கேட்டார்.

இதனால், எனது தாயார் பெயரில் இருந்த ஒரு ஏக்கர் நிலம் சிவாஜியின் பினாமி பெயருக்கு மாற்றப்பட்டது. பின்னர், ஒருநாள் எங்கள் வீட்டிற்கு சிவாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்து, நிலத்திற்கான அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையில், 2006ம் ஆண்டு எனது தாயார் கும்மிடிப்பூண்டி சென்று பார்த்தபோது 5 ஏக்கர் நிலத்தையும் வேலி போட்டு சிவாஜி மடக்கி வைத்திருந்தார். எங்கள் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மாந்தோப்பின் வருமானத்தையும் அவரே அனுபவித்து வந்தார்.

இப்போது, எனது சகோதரி படிப்பிற்காக அந்த நிலம் தேவைப்படுவதால் அந்த நிலத்தை திருப்பிக் கேட்டோம். ஆனால், சிவாஜி எங்களை மிரட்டினார். நீதிமன்றம் செல்லக் கூடாது என்று மிரட்டும் வகையில் அது இருந்தது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். தற்போது இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 5 கோடி என்று கூறப்படுகிறது.

சர்ச்சையில் சிக்கியுள்ள சிவாஜி, முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்து.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X