ஷோபா ராணிக்காக வரிந்து கட்டி ஆதரவு தரும் சிவபார்வதி

இந்த விவகாரத்தில் ஷோபா ராணிக்கு பிரஜா ராஜ்யம் கட்சி எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை. இதனைக் கண்டித்து, ஷோபா ராணிக்காகக் குரல் கொடுத்துள்ளார் என்.டி ராமாராவின் மனைவியும் போட்டி தெலுங்கு தேசம் கட்சித் தலைவியுமான லட்சுமி சிவபார்வதி.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பிரகாஷ் ராஜுக்கும் ஷோபனா ராணிக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதில் உண்மை இல்லை. ஷோபா ராணி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இப்படி களங்கப்படுத்துகிறார்கள்.
சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியினர் ஷோபா ராணிக்கு ஆதரவு குரல் எழுப்பாமல் மவுனமாக இருப்பது கேவலமானது. நான் அப்பெண்ணுக்கு துணையாக இருப்பேன்", என்று கூறியுள்ளார்.
ஒரு பெண் மனது இன்னொரு பெண்ணுக்குத்தானே புரியும்..
More from Filmibeat
அரசியல் சினிமா சிரஞ்சீவி கட்சி தெலுங்கு தேசம் பிரகாஷ் ராஜ் லட்சுமி சிவபார்வதி cinema lakshmi sivaparvathy praja rajya prakash raj shobha rani telugu


Click it and Unblock the Notifications











