twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவசேனா வெறியாட்டம்: மை நம் ஈஸ் கான் மும்பையில் ரிலீஸாகவில்லை!

    By Staff
    |

    Shahrukh Khan
    மும்பை & டெல்லி: சிவசேனா நடத்தி வரும் வன்முறை போராட்டங்கள் காரணமாக, ஷாரூக்கானின் மெகா பட்ஜட் படைப்பான மை நேம் ஈஸ் கான் திரைப்படத்தை மும்பையில் எந்தத் திரையரங்கிலும் வெளியிடுவதில்லை என தியேட்டர் உரிமையாளர்கள் முதல்கட்டமாக முடிவு செய்துள்ளனர். எனினும் இன்று இறுதி முடிவை அறிவிப்பதாகக் கூறியுள்ளனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இது பற்றி கருத்து தெரிவித்த இந்தி நடிகர் ஷாரூக் கான் பாகிஸ்தான் வீரர்களை சேர்க்க வேண்டும் என்றார். இதே கருத்தை நடிகர் அமீர்கானும் தெரிவித்தார். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    ஷாரூக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூறினார். ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ஷாரூக் கான் உறுதியாக நின்றார்.

    இதையடுத்து ஷாரூக் கானுக்கு எதிராக சிவசேனா கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். ஷாரூக்கான் படம் எதையும் மும்பையில் திரையிட விட மாட்டோம் என்றும் சிவசேனா கட்சியினர் மிரட்டி வருகின்றனர்.

    இந் நிலையில் ஷாரூக் கான் நடித்துள்ள மை நேம் இஸ் கான் படம் இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியா முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. மும்பையில் மட்டும் 63 தியேட்டர்களில் இந்தபடம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா கட்சி மிரட்டல் விடுத்தது.

    மை நேம் இஸ்கான் படம் திரையிட உள்ள தியேட்டர்களை சிவசேனா தொண்டர்கள் சூறையாடினார்கள். இதனால் பயந்துபோன தியேட்டர் உரிமையாளர்கள், ஷாரூக் கான் படத்தை வெளியிட தயக்கம் காட்டினார்கள்.

    ஷாரூக் கான் படம் வெளியிடப்படும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று மராட்டிய மாநில முதலவர்அசோக் சவான் அறிவித்தார். அவரது உத்தரவின் பேரில் மை நேரம் இஸ் கான் படம் திரையிடப்படும் தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து மை நேம் இஸ் கான் படத்தின் வினியோக உரிமையை வாங்கியுள்ள பாக்ஸ் ஸ்டார் டிஸ்டிரிபியூசன் செயல் இயக்குனர் விஜய்சிங் கூறுகையில், மை நேம் இஸ்கான் படம் நாடெங்கும் வெள்ளிக்கிழமை திட்டமிட்டப்படி வெளியிடப்படும் என்றார்.

    என்றாலும் தியேட்டர்காரர்கள் மை நேம் இஸ் கான் படத்தை திரையிட முன்வரவில்லை. மும்பையில் பெரும்பாலான தியேட்டர்களில் இன்று அந்த படம் வெளியாகவில்லை.

    மை நேம் இஸ் கான் படத்தை வெளியிடுவது குறித்து மும்பை தியேட்டர் உரிமையாளர்கள் நேற்றிரவு 2 தடவை கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ஷாரூக் கான் படத்தை வெள்ளிக்கிழமை திரையிட வேண்டாம் என்று தீர்மானித்தனர்.

    இன்று மீண்டும் தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ஷாரூக்கான் படத்தை வெளியிடுவது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

    டெல்லி, குஜராத், ஒரிஸ்ஸாவிலும் எதிர்ப்பு!:

    மை நேம் ஈஸ் கான் படத்தை நாட்டின் பிற பகுதிகளிலும் ஓட விடாமல் செய்ய வேண்டும் என்பதில் சிவசேனா தீவிரமாக உள்ளது. இதற்கு பஜ்ரங் தள் அமைப்பும் முழு ஆதரவு கொடுத்து வருகிறது. ஒரிmdஸா, குஜராத்தில் இந்தப் படத்தை ரிலீஸாக விடமாட்டோம் என பஜ்ரங் தள் அறிவித்துள்ளது.

    டெல்லியில் இந்தப் படம் திரையிடப்பட்ட சத்யம் திரையரங்கை சிவசேனா, பஜ்ரங் தள் தொண்டர்கள் சூறையாடினர்.

    பாதுகாப்புக்கு இருந்த போலீசார் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, படம் பார்க்க வந்திருந்த மக்கள் பதறியடித்தபடி ஓடினர்.

    தியேட்டர் கண்ணாடிகள், இருக்கைகள், ஏசி இயந்திரம் என அடித்து நொறுக்கப்பட்டன.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X