ஓமக்குச்சி நரசிம்மன் மரணம்
பிரபல நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மரணமடைந்தார்.
சூரியன், ஜென்டில்மேன், முதல்வன் உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் ஓமகுச்சி நரசிம்மன் (வயது 73).
எம்ஜிஆர்-சிவாஜி காலத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கத் துவங்கிய ஓமக்குச்சி நரசிம்மன், கவுண்டமணி-செந்திலுடன் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானார். குறிப்பாக சூரியன் படத்தில், கவுண்டமணி, 'நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா' என ஓமக்குச்சி நரசிம்மனைப் பார்த்துச்சொல்லும் வசனம் மிகப் பிரபலம்.
ஓமக்குச்சி நரசிம்மன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை ஓமகுச்சி நரசிம்மன் மரணம் அடைந்தார். இது பற்றி அறிந்ததும் திரை உலகை சேர்ந்தவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) பெசன்ட்நகர் மயானத்தில் அவரது உடல் தகனம் நடக்கிறது.


Click it and Unblock the Notifications











