'ரெட்டைச் சுழி' ஆடியோ - வெளியிடும் ரஜினி - ஐஸ்!

இதனை வெளியிடவிருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் அவரது எந்திரன் ஜோடி ஐஸ்வர்யா ராய் என்பதுதான் விசேஷமே.
இந்தப் படத்தில் ரஜினியின் குரு கே பாலச்சந்தரும் ரஜினிக்கு பரட்டை என்ற மறக்க முடியாத கதாபாத்திரத்தை உருவாக்கிய, அவருடன் அடிக்கடி மோதி சமாதானமாகிக் கொள்ளும் பாரதிராஜாவும்தான் நாயகர்கள்.
பொதுவாக ஷங்கர் படங்களின் அனைத்து விசேஷங்களிலும் ரஜினி தவறாமல் வந்து விடுவார். ஷங்கரின் சென்டிமெண்ட் வேண்டுகோளை அவர் தட்டுவதேயில்லை.
இந்த முறை ரஜினியுடன், ஐஸ்வர்யா ராயும் ஆடியோ வெளியீட்டில் பங்கேற்று நிகழ்ச்சியை இன்னும் வண்ணமயமாக்குகிறாராம்.
எந்திரன் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்காக சென்னையில் இப்போது முகாமிட்டுள்ள ஐஸ்வர்யா, தனது கால்ஷீட் சொதப்பல்களை முழுமையாக சரி செய்து தரும் பொருட்டு, ஷங்கரின் இந்த வேண்டுகோளை உடனடியாக ஒப்புக் கொண்டதாகக் கூறுகிறார்கள்.
ரெட்டைச் சுழி படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இளையராஜா வீட்டிலிருந்து ஷங்கர் கேம்புக்கு செல்லும் முதல் இசையமைப்பாளர் இவர்தான்!


Click it and Unblock the Notifications











