12 இயர்ஸ் ஆஃப் பில்லா.. அவ்ளோதான் அஜித் என்றவர்களுக்கு ஐ அம் பேக் என மாஸ் காட்டிய அஜித்!

சென்னை: கோலிவுட்டில் இனி அஜித் சேப்டர் ஓவர் என சொன்னவர்களுக்கு பில்லா ரீமேக் மூலம் ஐ அம் பேக் என மாஸ் காட்டிய அஜித், விஸ்வாசம் வரை தனது ரசிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வலிமை சேர்த்து வருகிறார்.

அமிதாப் பச்சனின் டான் படத்தை தமிழில் பில்லா என ரீமேக் செய்து ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் ஆனார்.

அதே படத்தை மீண்டும் ஸ்டைலிஷ் ஆகவும் மலேசியா பேக் ட்ராப்பில் அதைவிட பிரம்மாண்டமாகவும் ரீமேக் செய்து தல அஜித் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

டிரெண்டிங்

டிரெண்டிங்

2007ம் ஆண்டு வெளியான அஜித்தின் பில்லா படம் இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு ட்விட்டரில் 12YrsOfSovereignBILLA என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

பிளாக் பஸ்டர்

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம் நடிப்பில் வெளியான பில்லா படம், அந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது என்பதை இந்த ரசிகர் தனது ட்வீட் மூலம் வெளிப்படுத்துகிறார்.

சிறந்த ஓபனிங் சீன்

தல அஜித்துக்கு கிடைத்த ஓபனிங் சீன் காட்சிகளிலேயே பில்லா படத்தில் இடம்பெற்றுள்ள ஓபனிங் சீன் பெஸ்ட் என இந்த ரசிகர் அந்த காட்சியின் வீடியோ க்ளிப்புடன் பதிவிட்டுள்ளார்.

கம் பேக்

2006ம் ஆண்டு வெளியான பரமசிவன் படத்திற்காக உடல் எடையை குறைத்து ரொம்ப கஷ்டப்பட்டு அஜித் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் சரியாக அவருக்கு அமையவில்லை. அதற்கு அடுத்த ஆண்டு வெளியான பில்லா படத்தில், முற்றிலும் வேற ஒரு அஜித்தாக செம்ம ஸ்டைலிஷ் கம்பேக் கொடுத்து சூப்பர் ஹிட் வெற்றியையும் பதிவு செய்தார்.

மாஸ் டயலாக்

பில்லா படத்தில் அஜித்குமாரிடம் நடிகை நமீதா, நீ யாரையும் நம்ப மாட்டியா எனக் கேட்பார், அதற்கு அஜித், நம்புறேன் எல்லாரையும் நம்புறேன், ஆனா அவங்களுக்கு உள்ள இருக்குற மிருகத்தை மட்டும் நம்ப மாட்டேன் என மாஸ் டயலாக் பேசி இருப்பார். அந்த மாஸ் டயலாக்கை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

லேடி சூப்பர்ஸ்டார்

பில்லா படம் அஜித்துக்கு மட்டுமல்ல நயன்தாராவுக்கும் கம்பேக் படம் தான். பிகினி உடையில் ஹாட்டாகவும், ஆக்‌ஷன் சீன்களில் அதிரடியாகவும் நடித்து லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தையும் பில்லா படத்தின் மூலமாகவே நயன்தாரா பெற்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X