twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சசிகுமாரின் சுப்பிரமணியபுரம்.. வெளியாகி இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவு!

    |

    சென்னை: சசிகுமார் முதல் முறையாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான திரைப்படம் சுப்பிரமணியபுரம் இதே நாளில் கடந்த 2008 ஆம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது.

    வந்தாரயை வாழ வெச்ச ஊரு புயல் வந்தாலும் அசையாது பாரு என்ற வரிகளுடன் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரையை கதைகளமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இந்த சுப்பிரமணியபுரம்.

    சசிகுமாருக்கு இது தான் முதல் திரைப்படம் நடிப்பிலும் சரி இயக்குவதிலும் சரி, ஒரு 80களில் நடக்கும் ஒரு சம்பவம் தான் இந்த படத்தின் மூலக்கதை.

    சுப்ரமணியபுரம் ரிலீஸாகி 12 வருடம்.. இந்த நாளை எப்படி மறக்க முடியும்..? சசிகுமார் டச்சிங் போஸ்ட்!சுப்ரமணியபுரம் ரிலீஸாகி 12 வருடம்.. இந்த நாளை எப்படி மறக்க முடியும்..? சசிகுமார் டச்சிங் போஸ்ட்!

    சிறந்த இயக்குனர்

    சிறந்த இயக்குனர்

    இதில் தனது வித்தியாசமான திரைக்கதையை கையாண்ட விதம் சசிகுமாருக்கு பல விருதுகளை பெற்று தந்தது, குறிப்பாக சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதை சசிகுமார் பெற்றார். மேலும் இதில் தனது நண்பரான சமுத்திரக்கனியையும் அறிமுகம் செய்து வைத்தார் சசிகுமார்.

    வெற்றி சசிகுமார்

    வெற்றி சசிகுமார்

    தமிழ் சினிமாவில் அந்த இப்படம் வருவதற்கு முன்பான காலகட்டத்தில் இது போன்ற ஒரு திரைப்படம் வந்ததில்லை. இப்படத்தின் வெற்றி சசிகுமாருக்கு எவ்வளவு முக்கிய பங்கு இருக்கின்றதோ அதே அளவு பங்கு ஒளிப்பதிவாளரான கதிர்க்கும் இருக்கிறது.

    அதிகம் ஒலித்த பாடல்களாக

    அதிகம் ஒலித்த பாடல்களாக

    இவர் மதுரையை காட்சிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. மேலும் ஜேம்ஸ் வசந்த் பின்னணி இசை படத்தை வேறு ஒரு பரிமாணத்தில் பார்க்க தூண்டியது. இதில் வரும் கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் வரும் பாடல் அந்த காலகட்டத்தில் அனைத்து தொலைக்காட்சிகளிலும் மற்றும் மக்கள் நெஞ்சங்களிலும் அதிகம் ஒலித்த பாடல்களாக இருந்தது. இந்த பாடலில் படத்தின் ஹீரோ ஜெய் தனது தலையை சாய்த்து ஒரு சேர ஆடுவார் அது போல பல இளைஞர்கள் அந்த சமயத்தில் அதனையே பின்பற்றி பலர் இந்த நடனத்தை அப்படியே ஆடினார்கள்.

    கேங்ஸ் ஆப் வசேப்புர்

    கேங்ஸ் ஆப் வசேப்புர்

    மேலும் பாலிவுட் திரையுலகில் தனது படங்களால் திரும்பி பார்க்க செய்த இயக்குனர் அனுராக் காஷ்ய்ப். இவர் எடுத்த கேங்ஸ் ஆப் வசேப்புர் திரைப்படம் அங்கு பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அப்படம் உருவாவதற்கு மூலதனமாக இருந்தது இந்த சுப்பிரமணியபுரம் திரைப்படம் தான்.

    தரமான சம்பவமாக

    தரமான சம்பவமாக

    மேலும் இப்படத்தில் நடிகர் கஞ்சா கருப்புவின் கதாபாத்திரம் அனைவரிடமும் பாராட்டுக்கள் பெற்றது குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஒரு தரமான சம்பவமாக அமைந்தது. இன்று இத்திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் கழிந்துவிட்டன இன்றளவும் தமிழ் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படமாக இது திகழ்கிறது.

    சசிகுமாரிடம் வேண்டுகோள்

    சசிகுமாரிடம் வேண்டுகோள்

    இன்று அதனை ரசிகர்கள் சமுக வலை தளங்களில் கொண்டாடி வருகின்றனர். சுப்பிரமணியபுரம் படத்தை போல ஒரு திரைப்படத்தை மீண்டும் தமிழ் ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் இயக்குனர் சசிகுமாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    English summary
    12 years of Subramaniapuram
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X