12th Fail Kamal Review: திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த 12th Fail மூவி... கமல் பாராட்டு மழை!!

சென்னை: இந்தியில் விது வினோத் சோப்ரா இயக்கியுள்ள திரைப்படம் 12th Fail.

இந்தப் படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, சரிதா ஜோஷி, மேதா ஷங்கர், பிரியான்சு சாட்டர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

12ம் வகுப்பில் ஃபெயிலாகி IPS அதிகாரியான மனோஜ் குமார் ஷர்மாவின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

சினிமா ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள 12th Fail படத்தை, உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

 12th Fail Kamal Review: Kamal Haasan praised Vidhu Vinod Chopras 12th Fail film

12th Fail படத்தை பாராட்டிய கமல்ஹாசன்
இந்தியில் விது வினோத் சோப்ரா இயக்கியுள்ள திரைப்படம் 12th Fail. விக்ராந்த் மாஸ்ஸி, சரிதா ஜோஷி, மேதா ஷங்கர், பிரியான்சு சாட்டர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 12th Fail ரசிகர்களின் மிகப் பெரிய வரவேற்புடன் பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

12வது வகுப்பில் பெயிலான மனோஜ் சர்மா, ஐபிஎஸ் ஆபிஸரான உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளின் தரம், தேர்வு எல்லாம் எப்படி நடக்கிறது என்பன தெரிந்திருந்தாலும், 12th Fail படத்தில் காட்டப்படும் அனைத்தும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கதை, திரைக்கதை, மேக்கிங் என ஒட்டுமொத்தமாக படம் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகியுள்ளது.

இந்தியில் வெளியான 12th Fail, இந்தியா முழுவதும் அனைத்து மொழி ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்தப் படம் வரும் 3ம் தேதி முதல் தமிழிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 12th Fail படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் மனம் திறந்து பாராட்டியுள்ளார். 12th Fail படத்தை திரையரங்கில் சென்று பார்த்துள்ள கமல்ஹாசன், மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 12th Fail ஒரு லட்சியமான படம் இல்லை, ஆனால், இது லட்சியம் குறித்து பேசியுள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவும் இந்தப் படத்தை வேறு தளத்துக்குக் கொண்டுச் சென்றுள்ளனர். ரொம்பவே பாசிட்டிவான எண்ணங்களையும் நம்பிக்கையையும் தரக்கூடிய படைப்பாக 12th Fail உருவாகியுள்ளது. சுயாதீன படங்களுக்கான புதிய பாதையை இது உருவாக்கியுள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.

 12th Fail Kamal Review: Kamal Haasan praised Vidhu Vinod Chopras 12th Fail film

மேலும், 12th Fail மாதிரியான ஒரு படம் கொடுத்ததற்கு நன்றி என விது வினோத் சோப்ராவிற்கு நன்றி தெரிவித்துள்ள கமல், நம்பிக்கையுடன் சென்று இந்தப் படத்தை பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 12th Fail படம் பற்றிய பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில், கமல்ஹாசனும் பாராட்டுத் தெரிவித்துள்ளது ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X