12th fail நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி சினிமாவில் இருந்து விலக முடிவு.. காரணம் என்ன?

சென்னை: விது வினோத் சோப்ராவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு பாக்ஸ் ஆபிசிலில் வசூலை அள்ளிய 12வது ஃபெயில் படத்தில் நடித்த விக்ராந்த் மாஸ்ஸி சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி 1987ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்த இவர், மும்பையிலேயே பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 2013ம் ஆண்டு முதல் சினிமாவில் சின்ன சின்ன ரோலில் நடித்து வரும் இவர், Broken But Beautiful என்ற வெப் தொடரில் நடித்த போது தன்னுடன் நடித்த ஷீதல் தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

vikrant massey

நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி: பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்தாலும் விக்ராந்த் மாஸ்ஸிக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது 12th fail தான் இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. விது வினோத் சோப்ராவின் இயக்கத்தில், விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் மேதா ஷங்கர் நடித்த இந்த படம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தியேட்டரில் வெளியானது. ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் ஷர்மாவைப் பற்றிய அனுராக் பதக் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.56 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.

விலகுகிறேன்: இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, Sector 36, The Sabarmati Report ஆகிய படத்தில் நடித்தார். 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான The Sabarmati Report திரைப்படம் நவம்பர் 15ந் தேதி தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், விக்ராந்த் மாஸ்ஸி இன்ஸ்டாகிராமில், சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

சில கடமைகள் உள்ளன: அதில், கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் எனக்கு ஆதரவு அளித்துள்ளீர்கள், அதற்கு ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். ஆனால், வாழ்க்கையில் நான் முன்னேறி சென்று கொண்டு இருந்தாலும், இப்போது நான் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது. ஒரு கணவனாக, தந்தையாக, மகனாக, ஒரு நடிகராகவும் இந்த கடமையாக செய்தே ஆகவேண்டும். வரும் 2025ம் ஆண்டு கையில் இருக்கும் படத்தின் மூலம் நாம் கடைசியாக சந்திப்போம். என்றென்றும் நான் உங்கள் அன்புக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்

விக்ராந்தின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்தியை பார்த்த அவரின் தீவிர ரசிகர் ஒருவர், இது உண்மையாக இருக்கக்கூடாது, என்று எழுதியுள்ளார். மற்றொருவர், நீங்கள் ஏன் அப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X