ஆயிரம் சூரியனாய் உன் முன் நிற்பேன்.. விஜய்க்காக மாணவி சொன்ன கவிதை.. டார்கெட் செய்த ரசிகர்கள்!
சென்னை: 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவை நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தி வருகிறார். கடந்த வாரம் 21 மாவட்ட மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்ட நிலையில், ஜூலை 3ம் தேதியான இன்று 17 மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை விஜய் வழங்கி வருகிறார்.
மாணவர்கள் மற்றும் மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் மேடைக்கு வந்து விஜய்யுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டும் அவர்களுக்கு பிடித்த போஸ் வைத்தும் விஜய்யுடன் ரொம்பவே அன்பாகவும் பாசமாகவும் கலந்துரையாடுவதை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

தளபதி ரசிகர்களுக்கு இதை விட மிகப்பெரிய ட்ரீட் என்ன இருக்க முடியும் என்றும் ஒரு நாள் முழுவதும் விஜய் அண்ணா செய்வதை பார்த்துக்கிட்டே இருப்பது பாக்கியம் தான் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்காக மாணவர்கள் காத்திருப்பதாகவும் விஜய்க்காக கவிதை சொல்வது, பாராட்டு பத்திரம் வாசிப்பது என்றும் அலப்பறைகள் நடைபெற்று வருகின்றன.
மாணவிக்கு மைக் பிடித்த விஜய்: பார்வை தெரியாத மாணவி பேசும் போது நடிகர் விஜய் மைக் பிடித்துக் கொண்டு அவரை பேச வைத்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. நடிகர் விஜய்யை பார்க்க முடியவில்லையே என்கிற வருத்தத்தை அந்த மாணவி வெளிப்படுத்திய விதம் பலரையும் கலங்க வைத்துள்ளது. "உங்கள் நடிப்புத் திறமையை பார்க்க முடியவில்லை என்றாலும், உங்கள் குரலை கேட்க வந்திருக்கேன் அண்ணா" என பேசி விஜய்யை நெகிழ வைத்து விட்டார்.
+2 படிக்கும் போது நீங்க முதல்வர்: இஸ்லாமிய மாணவி ஒருவர் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற நிலையில், நடிகர் விஜய்யிடம் விருது வாங்கினார். அதன் பின்னர் மைக் பிடித்து பேசிய அவர், இதே போல நல்லா படிச்சு +2விலும் முதல் மதிப்பெண் எடுத்து முதலமைச்சர் விஜய் அண்ணாவிடம் பரிசு வாங்க வருவேன் எனக் கூறினார்.
ஆயிரம் சூரியனாய் உன் முன் நிற்பேன்: மற்றொரு மாணவி நடிகர் விஜய்யிடம் விருது வாங்கிய பின்னர் பேசும் போது, விஜய்க்காக ஒரு கவிதை ஒன்றையும் வாசித்து அரங்கத்தையே அதிர வைத்தார். அவரது வீடியோவை தான் தற்போது விஜய் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். "ஆயிரம் சூரியனாய் உன் முன் நிற்பேன்.. நீ சாம்பல் ஆகும் முன் என் வெற்றியை உலகமே உரக்கச் சொல்லும்.. உன் செவிப்பறை கிழிய" என கணீர் குரலில் பேசி அசத்தி விட்டார். நடிகர் விஜய்யை ரோல் மாடலாக நாம் கொள்ள வேண்டும் என்றும் கூறினார் அந்த மாணவி. அவரது வீடியோவை ஷேர் செய்து திமுகவுக்கு எதிரான கமெண்ட்டுகளுடன் தவெக ஆர்மியினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
மாணவிகள் ஹேப்பி: நடிகர் விஜய்யை நேரில் சந்திக்கும் வாய்ப்பு மட்டுமின்றி அவருடன் பேசவும், அவர் பற்றி பேசவும் அவர் கையை பிடித்துக் கொண்டு வித விதமாக ஹார்ட்டின் வைத்து போஸ் கொடுப்பது என மாணவிகள் விளையாடி ஹேப்பியாகி வருகின்றனர். மாணவர்கள் விஜய்யுடன் அதிகமாக மாஸ்டர் போஸ் வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications