மீண்டும் இணையும் மோகன்லால் – ஜீத்து ஜோசப்... இன்னொரு த்ரிஷ்யமா ?

திருவனந்தபுரம் : மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கினார். இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து த்ரிஷ்யம் படத்தின் 2 ம் பாகத்தில் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி மீண்டும் இணைந்தது.

ஓடிடி.,யில் வெளியிடப்பட்ட த்ரிஷ்யம் 2 படமும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்றதால் இந்த கூட்டணி மீண்டும் இணைய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் தானாம்.

மீண்டும் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி

மீண்டும் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி

இந்த தகவலை சோஷியல் மீடியாவில் அறிவித்த இவர்கள், புதிய படத்திற்கு 12 th Man என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது முற்றிலும் த்ரில்லர் படமாம். இதற்கு அனைவரின் ஆதரவும் தேவை என ஜீத்து ஜோசப் கேட்டுள்ளார்.

மகிழ்ச்சியுடன் சொன்ன மோகன்லால்

மகிழ்ச்சியுடன் சொன்ன மோகன்லால்

இந்த புதிய படம் பற்றி மோகன்லால் கூறுகையில், ஜீத்து ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூர் உடன் எனது அடுத்த படமான 12 th Man பண்ண உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

டைட்டிலுடன் ஃபஸ்ட்லுக்

டைட்டிலுடன் ஃபஸ்ட்லுக்

படத்தை அறிவித்த உடனேயே இதன் ஃபஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அதில் பங்களா ஒன்றின் முன்புறம் மோகன்லால் திரும்பி நிற்பதை போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பும், போஸ்டரையும் இணையத்தை கலக்கி வருகிறது.

ப்ருத்விராஜ் படம் அப்புறம் தான்

ப்ருத்விராஜ் படம் அப்புறம் தான்

ஆசிர்வாத் சினிமாஸ் பேனரில் இந்த படம் தயாரிக்கப்பட உள்ளது. ப்ருத்விராஜை இரண்டாவது முறையாக டைரக்ட் செய்யும் ப்ரோ டாடி படத்தில் நடிப்பதற்கு முன், 12 th Man படப்பிடிப்பை மோகன்லால் துவங்க உள்ளார்.

ராம் படமும் வெயிட்டிங்

ராம் படமும் வெயிட்டிங்

அதே சமயம், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், த்ரிஷா நடிக்கும் ராம் படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்க வேண்டி இருப்பதால், தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளனர்.

 சிங்கப்பூரில் த்ரிஷ்யம் 2

சிங்கப்பூரில் த்ரிஷ்யம் 2

மோகன்லால் தற்போது நடித்து முடித்துள்ள மரக்கர் - அரபிக்கடலின்டே சிம்மம், ஆராட்டு ஆகிய படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. மோகன்லால் நடித்துள்ள த்ரிஷ்யம் 2 படம் ஓடிடி.,யில் ரிலீசான பல மாதங்களுக்கு பிறகு சிங்கப்பூரில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X