ப்பா.. என்ன மாதிரியான ஃபீல்.. யாரடி நீ மோகினி ரிலீசாகி 12 வருஷம் ஆகிடுச்சு #12YearsofBBYNM
சென்னை: தனுஷ், நயன்தாரா நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படம் வெளியாகி இன்றுடன் 12 வருஷம் நிறைவடைந்துள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெங்கடேஷ், த்ரிஷா நடிப்பில் வெளியான Aadavari Matalaku Arthale Verule படத்தின் ரீமேக் தான் யாரடி நீ மோகினி.
ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான இந்த படம் தனுஷ் மற்றும் நயன்தாராவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

செம ஃபீல்
யாரடி நீ மோகினி படத்தை இப்போ பார்த்தாலும், பல இளைஞர்களுக்கு அந்த படம் செம ஃபீலிங்கை கொடுக்கும். அந்த அளவுக்கு தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே வரும் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். உருகி உருகி காதலிச்ச பெண்ணை, நண்பன் திருமணம் செய்து கொள்ளப் போவதை அறிந்து விலகும் நடிப்பில் தனுஷ் அசத்தியிருப்பார்.
யுவன் இசையில்
வெண் மேகம் பெண்ணாக, எங்கேயோ பார்த்த மயக்கம், கண்ணிலே தீயை வைத்தாய், நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டு போறவளே என யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் அத்தனை பாடல்களும் காதலை உருக்கி ஊற்றும் விதமாகவே இருக்கும். யுவனின் ரொமான்டிக் இசை இந்த படத்திற்கு வேற லெவல் ஆல்பத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

லாக் டவுன் நேரத்தில்
கொரோனா பாதிப்பால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ள நிலையில், காதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட இந்த படத்தை குடும்பத்துடன் லாக் டவுன் நேரத்தில் ஜாலியாக பார்த்து மகிழலாம். சூப்பர் ஹிட் படங்களை போட்டு வரும் டிவி சேனல்கள் இந்த படத்தையும் சீக்கிரம் ஒளிபரப்பு செய்யும் என எதிர்பார்க்கலாம்.
ரகுவரன் நடிப்பு
உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலும் நடிகர் ரகுவரன் தனது தனித்துவமான நடிப்பை இந்த படத்தில் வெளிக்காட்டி இருப்பார். பாம் வைக்கும் மார்க் ஆண்டனி போன்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த, ரகுவரன் தனுஷின் தந்தையாக உணர்வு பூர்வமாக நடித்திருப்பார். அதிலும் அந்த "ஹே பொண்ணு" இன்டர்வியூ சீன் எல்லாம் வேற லெவல்.
டிரெண்டிங்
தனுஷ், நயன்தாரா நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படம் வெளியாகி இன்றுடன் 12 வருஷம் நிறைவடைகிறது. அதனை கொண்டாடும் வகையில், #12YearsofBBYNM என்ற ஹாஷ்டேக் காலை முதலே ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த டிரெண்டிங்கே இந்த படத்திற்கு இன்னமும் ரசிகர்கள் இருப்பதை உணர்த்துகிறது.
Recommended Video
200 நாட்கள்
2008ம் ஆண்டு வெளியான யாரடி மோகினி திரையரங்குகளில் அப்போதே 200 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய படம். காதலர்களை மட்டுமின்றி ஃபேமிலி ஆடியன்ஸையும் இந்த படம் வெகுவாக கவரும் விதமாக இயக்குநர் செல்வராகவன் செம சூப்பராக திரைக்கதையை வடிவமைத்திருப்பார். முதல் பாதி ஒரு படமாகவும், இரண்டாம் பாதி இன்னொரு படமாகவும் தெரியும்.


Click it and Unblock the Notifications











