'பைசா'வுக்கு கரன்சி தோரணம்!

வந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கிவிட்டனர். திரும்பின பக்கமெல்லாம் ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய் நோட்டு மயம்... ஒரு நிமிஷம் நிஜமான நோட்டுதானே என எண்ணுமளவுக்கு 'நல்லாவே அடிச்சிருந்தாங்க!'
எல்லோரின் பார்வையும் கவர்ச்சியில் கிறங்கடித்த கதாநாயகியைக் கூட விட்டுவிட்டு அந்த தோரணங்கள் மீதே இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொஞ்ச நேரம் அவற்றைப் உற்றுப் பார்த்த பிறகுதான் அவை அனைத்தும் டூப்ளிகேட் ரூபாய் என்று புரிந்துகொண்டு நடப்பு உலகுக்கு திரும்பினார்கள் விருந்தினர்கள்.
படத்தின் பெயர் பைசா என்பதால் திரும்பின பக்கமெல்லாம் ரூபாய் நோட்டுக்களாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்களாம்.
பார்க்கர் பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் அனிதா, ரூபஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் புதுமுகங்கள் சச்சின், லாவண்யா ஜோடியாக நடிக்கின்றனர். மற்றும் அபிஷேக், ஆஷிஷ் வித்யார்த்தி, தேவன் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஷாந்தி நிகேதன் இயக்குகிறார்.
பணம் சம்பாதிக்கப் படும் பாடும், அப்படி பாடுபட்டு சம்பாதிக்கும் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதையும் சொல்லும் படமாம் இது.
எங்கேயோ கேட்ட கதையாக இருக்கே!


Click it and Unblock the Notifications











