ஆறாவது முறையும் அய்யாதான் முதல்வர்! - வாக்களித்த பின் வடிவேலு பேட்டி

இந்தத் தேர்தலில் வேறு எந்தப் பேச்சாளரையும் விட மக்களை அதிகமாகக் கவர்ந்தவர் வடிவேலுதான். சில இடங்களில் அவர் வரம்பு மீறினாலும், மக்கள் அவர் பேச்சைக் கேட்க திரண்டு வந்தனர். முதல்வர் கருணாநிதிக்குப் பிறகு, வடிவேலுவுக்குத்தான் அதிகக் கூட்டம் என்றால் மிகையல்ல. துணை முதல்வர் முக ஸ்டாலினே, இந்தத் தேர்தலில் ஹீரோ வடிவேலு எனும் அளவுக்கு கலக்கினார் மனிதர்.
சாலிகிரமத்தில் உள்ள காவேரி மேல்நிலைப் பள்ளியில் வடிவேலு இன்று தனது வாக்கை செலுத்தினார். இவர் வருவதற்கு சற்றுமுன்னர்தான் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தன் மனைவியோடு வந்து வாக்களித்துவிட்டுப் போனார்.
வாக்கைச் செலுத்திய பிறகு வெளியில் வந்த வடிவேலு நிருபர்களிடம் கூறுகையில், "அய்யா கலைஞர் அமோகமாக ஜெயிப்பார். ஆறாவது முறையும் முதல்வராக அமர்வார். அத்தனை நல்ல திட்டங்களும் அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தொடரும். இது உறுதி," என்றார்.


Click it and Unblock the Notifications











