சிறுமிகள் சித்ரவதை நடிகை-கணவர் முன்ஜாமீன் மனு !

By Staff

Shenbaga
ஆந்திர சிறுமிகள் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி ஆவாரம் பூ நடிகை நந்தினியும் அவர் கணவர் பாபு கிருஷ்ணனும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் துளசியம்மாள். ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியை ரூ. 2000க்கு வாங்கி நடிகை நந்தினியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மேலும் ஒரு சிறுமியையும் இதே போல அனுப்பி வைத்தார்.

அந்த சிறுமிகளை 6 மாதமாக வாட்ச்மேன் சக்கரபாணி, பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் பாபு கிருஷ்ணன் வீட்டில் இருந்து 2 சிறுமிகளும் தப்பினர். பொது மக்கள் அவர்களை கெல்லீசில் உள்ள மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர்.

சூளைமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து வாட்ச்மேன் சக்கரபாணியை கைது செய்தனர். இதற்கிடையில், சிறுமிகளை வேலைக்கு அமர்த்தியதாக ஆவாரம்பூ நாயகி நந்தினி மற்றும் அவர் கணவர் பாபு கிருஷ்ணன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சக்கரபாணியும், முன்ஜாமீன் வழங்கக் கோரி பாபுகிருஷ்ணனும், நடிகை நந்தினியும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு, முதன்மை செஷன்ஸ் நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ஷாஜகான் ஆஜரானார். மனுதாரர்களின் கோரிக்கைக்குப் பின் திங்கட்கிழமைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X