பேராண்மை.. இடஒதுக்கீடு.. ஜனநாதனுக்கு பாராட்டு

Peranmai
பேராண்மை படம் பார்த்த முதல்வர் கருணாநிதி, படம் முடிந்த பிறகு அதன் இயக்குநர் ஜனநாதனிடம், இட ஒதுக்கீடு பற்றி சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றார்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்க, ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள படம் பேராண்மை. அய்ங்கரன் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை சில தினங்களுக்கு முன் வழக்கமாக தான் படம் பார்க்கும் ஃபோர்பிரேம்ஸ் திரையரங்கில் பார்த்தார் முதல்வர் கருணாநிதி. படம் பார்த்து முடித்ததும், ஜெயம் ரவி உள்பட அதில் பங்காற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

பின்னர், இந்தப் படம் குறித்து சிறிது நேரம் இயக்குநர் ஜனநாதனுடன் பேசிக் கொண்டிருந்தார் முதல்வர்.

இதுபற்றி ஜனநாதனிடம் கேட்டபோது, "இடஒதுக்கீடு பற்றி இந்தப் படம் விவாதிப்பதால், அது பற்றி சில விவரங்கள் மற்றும் விளக்கங்களைச் சொன்னார் முதல்வர் கலைஞர். படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், சமூக மாற்றத்துக்கு உதவும் கருத்துக்களைச் சொல்லியிருப்பதாகவும் பாராட்டினார். மிகவும் மகிழ்வாகவும், பெரிய அங்கீகாரம் கிடைத்ததாகவும் உணர்ந்தேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X