வழக்கறிஞரை மணக்கும் தயாநிதி!

அவர் மணக்கவிருக்கும் பெண்ணின் பெயர் அனுஷா. வழக்கறிஞராக பணியாற்றுகிறார்.
சென்னையில் நடக்கும் இந்த நிச்சயதார்த்தத்தை முதல்வர் கருணாநிதி முன்னின்று நடத்தி வைக்கிறார்.
வாரணம் ஆயிரம் படத்தை விநியோகித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் தயாநிதி. முதல் படம் தோல்வி என்றாலும், அடுத்த படமான 'தமிழ்ப் படத்தில்' பெரிய வெற்றியைப் பெற்றார்.
இப்போது தூங்கா நகரம், அஜீத் - கௌதம் மேனன் படம் மற்றும் சிஎஸ் அமுதன் முதல் பிரதி அடிப்படையில் எடுத்துத் தரும் குவார்ட்டர் கட்டிங் போன்ற படங்களைத் தயாரித்து வருகிறார் தயாநிதி.


Click it and Unblock the Notifications











