சாலை விபத்தில் கிராமியப் பாடகி சின்னப்பொண்ணு படுகாயம்

தஞ்சை அருகே உள்ளது ரெட்டிபாளையம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு. கிராமிய பாடகி.
இவர் சந்திரமுகி (அண்ணனோட பாட்டு- பாட்டுக்கு முன் வரமே ஒரு பிட், அதைப் பாடியவர் இவர்தான்), தகப்பன்சாமி, சிவப்பதிகாரம், கருப்பசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
இவர் சென்னையில் நடைபெறும் கிராமிய கலைஞர்கள் நல வாரிய கூட்டத்தில் கலந்து கொள்ள தனது வீட்டில் இருந்து தனது மானேஜர், கணவர் ஆகியோருடன் புறப்பட்டார்.
கார் கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி என்ற இடத்தில் சென்ற போது, கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே பாடகி சின்னப்பொண்ணுவின் மானேஜர் தங்கராஜ் உடல் நசுங்கி இறந்தார்.
பாடகி சின்னப்பொண்ணு, அவரது கணவர் செல்வகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
பின்பு அவர்கள் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











