twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நமீதா படம் வெளியாக கோர்ட் தடை!

    |

    Namitha
    நமீதா நடித்து தீபாவளிக்கு வருவதாக இருந்த ஜெகன் மோகினி திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்து விட்டது.

    என்.கே. விஸ்வநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை முரளி சினி ஆர்ட்ஸ் சார்பில் முரளி தயாரித்துள்ளார்.

    இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தயாரிப்பாளரும், விநியோகிஸ் தருமான ஏ.எல். அழகப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,

    "படத்தின் தயாரிப்பாளர் முரளி ஏற்கனவே தயாரித்த நடிகர் ஸ்ரீகாந்தின் போஸ் படத்தை விநியோகித்ததில் எனக்கு ரூ. 4 லட்சம் பாக்கி தர வேண்டி இருக்கிறது. அந்த தொகையை இன்னமும் தராத நிலையில் இந்தப் படத்தை வெளியிட்டால் எனக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும்.

    எனவே 12 சதவிகித வட்டியோடு அந்த பணத்தை திருப்பித்தரும் வரை அந்த படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதி ராஜ சூர்யா, படத்தின் பிரிண்டை தயாரிப் பாளரிடம் தரக்கூடாது என சம்பந்தப் பட்ட லேப்புக்கு உத்தரவிட்டார். மேலும் 20ந் தேதி வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார்.

    மேலும் ஒரு புகார்...

    இந்நிலையில் இந்தப் படம் வெளியாவதை எதிர்த்து நடிகர் ஸ்ரீகாந்தும் புகார் கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் இவர் கொடுத்துள்ளது தயாரிப்பாளர் சங்கத்தில். ஜெகன் மோகினி தயாரிப்பாளர் முரளியின் முந்தைய படத்தில் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார்.

    இந்தப் படம் வெளியாக ஸ்ரீகாந்த் ரூ.20 லட்சம் கடன் கொடுத்திருந்தாராம். அதை முரளி இன்னமும் தரவில்லையாம். எனவே அதைக் கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் பண்ணட்டும். அதுவரை வெளியிடக் கூடாது என தனது புகாரில் தெரிவித்துள்ளாராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X