கேஆர்ஜி கை உடைந்தது!
புதுப்பட பூஜையில் தவறி விழுந்ததில் பட அதிபரும், தென்னிந்திய பிலிம் சேம்பர் தலைவருமான கேஆர்ஜியின் கை முறிந்தது. சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அபிராமி ராமநாதன் தயாரிக்கும் பஞ்சாமிர்தம் எனும் புதுப்படத்தின் துவக்க விழா இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையுடன் நடந்தது.
இதில் திரையுலக விஐபிக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
பிலிம் சேம்பர் தலைவர் என்ற முறையில் கேஆர்ஜி, இந்த விழாவுக்கு தலைமை வகிக்க வந்திருந்தார்.
பூஜை முடிந்ததும், நாசர் நடிக்கும் பாடல் காட்சியைப் படமாக்க திட்டமிருந்ததால், ஏவிஎம் - சி ப்ளோரில் விழா ஏற்பாடுகளைச் செயதிருந்தார்கள்.
அரங்குக்கு உள்ளே நுழையும் இடத்தில் ஒரு குறுகலான தற்காலிக படிக்கட்டு அமைக்கப்பட்டிருந்த்து. இதைக் கவனிக்காத கே.ஆர்.ஜி. தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கை எலும்பு முறிந்தது. வலியில் துடித்துப் போன கேஆர்ஜியை தனியார் மருத்துவமனையில் ஒன்றில் சேர்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











