வங்க இயக்குநர் புத்ததேவ் தாஸ்குப்தா மலையாளத்தில் இயக்குகிறார்
பிரபல வங்க மொழி இயக்குநர் புத்ததேவ் தாஸ்குப்தா, மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கப் போகிறார்.
சமூகக் கருத்தை அடிப்படையாகக் கொண்டதாம் இப்படம். இப்படத்தின் கதை, திரைக்கதையையும் குப்தாவே எழுதுகிறார். அரசியல்வாதியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்யதன் ஷெளகத்தை பின்னணியாகக் கொண்ட கதை இது.
இதுகுறித்து ஷெளகத் கூறுகையில், இது முழுமையான மலையாளப் படமாக இருக்கும். கேரள கிராமத்தை பின்னணியாகக் கொண்டு கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. கேரள சமூகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கதை அமையும்.
பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. தற்போது குப்தா ஒரு வங்காளப் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அதை முடித்த பின்னர் மலையாளத்திற்கு வருகிறார் என்றார் ஆர்யதன்.
ஆர்யதனின் தந்தை ஆர்யதன் முகம்மது, கேரளாவின் மூத்த காங்கிரஸ் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
மலையாளத்திற்கு வரும் புத்ததேவ் தாஸ்குப்தா மலையாளப் படத்தை இயக்குமம் புத்ததேவ் தாஸ்குப்தா மலையாளம் buddhadeb dasgupta to direct malayalam movie director buddhadeb dasgupta


Click it and Unblock the Notifications