கற்பழிப்பு: சினேகா சர்மா மீது மன்சூர் புது வழக்கு

By Staff

Mansoor ali Khan and Manju
தன் மீது கற்பழிப்பு வழக்கு தொடர்ந்த சினேகா சர்மா மீது நடிகர் மன்சூர் அலி கான் புது வழக்கினைத் தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்தைத் தவறாகப் பயன்படுத்தி தன் மீது வழக்கு தொடர்ந்து பெயரைக் கெடுத்து விட்டதாக இந்த வழக்கில் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

கடந்த 1996ம் ஆண்டு சினேகா சர்மா என்ற பெண் மன்சூர் அலிகான் மீது போலீஸில் கற்பழிப்புப் புகார் கொடுத்தார். மயக்க மருந்தை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து தன்னைக் கற்பழித்து விட்டதாக அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சினேகா சர்மா மீது மான நஷ்ட வழக்கை தாக்கல் செய்துள்ளார் மன்சூர் அலிகான். இதுதொடர்பாக அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ள மனுவில், சினேகா சர்மாவுக்கு ஏற்னவே திருமணமாகி விட்டது. சிவசுரேஷ் மிஸ்ரா என்பவருடன் அவர் குடும்பம் நடத்தியுள்ளார். இந்த நிலையில் பொய்யான புகாரைக் கூறி நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்தி எனது பெயரைக் கெடுத்துள்ளார்.

இந்த வழக்கில் எனது பாஸ்போர்ட் கடந்த 12 வருடங்களாக முடக்கப்பட்டு விட்டது. தொழிலில் கடுமையாக பாதிக்கப்பட்டேன். மன ரீதியாகவும் பெரும் உளைச்சலுக்கு ஆளானேன். பட வாய்ப்புகளும் வரவில்லை.

எனவே சினேகா சர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் மன்சூர் அலிகான். இதேபோல ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டும் சினேகா மீது வழக்கு தொடர மன்சூர் முடிவு செய்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X