twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நயன்தாராவுக்கு ஒரு நியாயம்... நிகிதாவுக்கு ஒரு நியாயமா?'

    By Shankar
    |

    கன்னட நடிகர் தர்ஷன் குடும்பப் பிரச்சினைக்கு காரணம் என்று கூறி நடிகை நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் தடை விதித்திருப்பது, திரையுலகில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வெறும் சந்தேகத்தின் பேரில் நிகிதாவுக்கு தடை விதித்தது சரி என்றால், உண்மையிலேயே ஒரு குடும்பத்தைக் கெடுத்து, ஒரு பெண் விவாகரத்தும் பெறும் அளவுக்குப் போகக் காரணமாக இருந்த நயன்தாராவை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டது சரியா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் பலரும்.

    தெலுங்கு நடிகர்கள் பலரும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கன்னட திரையுலகினரின் முடிவு தங்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளனர் (நிகிதா தெலுங்கில்தான் அதிகப்படங்கள் நடித்துள்ளார்).

    தமிழகத்திலும் நிகிதா விவகாரத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்து மக்கள் கட்சி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னட நடிகர் தர்ஷனுடன் தொடர்பு வைத்திருந்த நடிகை நிகிதாவுக்கு அங்கு உள்ள தயாரிப்பாளர் சங்கம் 3 வருடம் நடிக்க தடை விதித்துள்ளது. இந்த முடிவை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது.

    இதுபோன்ற தண்டனைகள் நடிகர், நடிகைகள் வாழ்க்கையை நெறிமுறைப்படுத்தும். கர்நாடக தயாரிப்பாளர் சங்கத்தை பின்பற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    பிரபுதேவா வாழ்க்கையில் நடிகை நயன்தாரா குறுக்கிட்டார். இதனால் ரம்லத் வாழ்க்கையை இழந்தார். நயன்தாராவுக்கும் இதுபோல் தடை விதித்து இருக்கவேண்டும். ஆனால் இங்கு அதை செய்ய தவறி விட்டனர். எனவே கன்னட தயாரிப்பாளர் சங்கத்தின் தடை நடவடிக்கைகளை தமிழகத்திலும் அமல்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்," என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது, "கன்னட சினிமாவினர் எடுத்த முடிவு அங்கு மட்டும்தான் பொருந்தும். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை வேறு, தொழில் வேறு. அதில் நாம் தலையிட முடியாது," என்றார்.

    English summary
    The ban on actress Nikitha has raised many questions among Tamil film personalities and some political outfits. Hindu Makkal Katchi has demanded similar ban on Nayanthara also who caused the divorce between Ramlath and Prabhu Deva.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X