twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெ.-விஜய்-விஜயகாந்த் ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு நழுவியது

    By Sudha
    |

    Jayalalitha, Vijay and Vijayakanth
    அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நடிகர் விஜய், நடிகர் விஜயகாந்த் ஆகியோர் ஒரே மேடையில் சந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சி நழுவிப் போய் விட்டது.

    விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சட்டப்படி குற்றம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை 25ம் தேதி திரைக்குக் கொண்டு வருகின்றனர்.

    இப்படத்தின் ஆடியோ வெளியீடு நாளை நடைபெறுகிறது. இதில் ஜெயலலிதாவை சிறப்பு விருந்தினராக அழைக்க எஸ்.ஏ.சந்திரசேகர் முடிவு செய்திருந்தார். அதேபோல விஜயகாந்த்தையும் அழைக்க தீர்மானித்திருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜெயலலிதா, விஜய், விஜயகாந்த் ஆகியோரை ஒரே மேடையில் நிறுத்தவும் அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது அது கை கூடவில்லை.

    முதலில் இதில் பங்கேற்க ஜெயலலிதா விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அவர் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து சந்திரசேகரிடம் ஜெயலலிதா கூறுகையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான வேலைகளில் பிசியாக இருப்பதால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலில் நாம்தான் வெல்லப் போகிறோம். எனவே படத்தின் வெள்ளி விழாவில் நாம் இணையலாம். அது வெற்றி விழாவாகவும் அமையும் என்றாராம்.

    ஜெயலலிதாவைப் போல விஜயகாந்த்தும் இந்த விழாவுக்கு வரவில்லையாம். அதேசமயம், விஜய் பங்கேற்கிறார்.

    English summary
    ADMK chief Jayalalitha is not partcipating in the audio release of Sattapadi Kutram. Earlier she had assured to take part the function. But citing seat sharing talks she has refused to attend. Vijayakanth also not coming, But Vijay will participate.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X