சீமானை விரட்டியடித்த திமுக-காங் தொண்டர்கள்

By Staff

Seeman and Ameer
காரைக்குடி: காரைக்குடியில் ஒரு ஓட்டுச் சாவடிக்கு வந்து இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி, அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்த இயக்குனர் சீமானை திமுகவினரும் காங்கிரசாரும் விரட்டியடித்தனர்.

ஓட்டுச் சாவடிக்கு அருகே வந்த சீமான், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்துக்கு ஓட்டு போடாதீர்கள், அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று அங்கு வாக்களிக்க வந்தவர்களிடம் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் திமுகவினரும் அவரை சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

அடிதடி நடக்கும் சூழல் ஏற்பட்டதால் போலீசார் அவரை ஒரு ஜீப்பில் அழைத்துச் சென்று தூரமாக ஒரு இடத்தில் இறக்கி விட்டுவிட்டு வந்தனர்.

இதையடுத்து தனது சொந்த ஊரான அரணையூரில் வாக்களித்தார் சீமான்.

அமீருக்கு வாக்கு இல்லை.

அதே போல இலங்கைத் தமிழர் விஷயத்தில் தீவிரம் காட்டி வரும் இன்னொரு இயக்குனரான அமீரின் குடும்பத்தினர் மதுரை கே.கே. நகரில் ஒரு அபார்ட்மென்டில் வசிக்கின்றனர்.

ஆனால் இந்த முறை வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை. இதனால் ஓட்டு போட வந்த அவர் வாக்களிக்க முடியாமல் திரும்பினார்.

அமீரின் உதவியாளர் போல இருக்கும் நடிகர் 'கஞ்சா' கருப்பின் பெயரும் சென்னையில் இல்லை. இதனால் சாலி கிராமத்தில் வசிக்கும் அவர் ஓட்டு போட முடியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X