வடிவேலு வழக்கு – ஜாமீன் கோரி சிங்கமுத்து, கண்ணன் மனு

இதுதொடர்பாக இருவரும் தனித் தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
சிங்கமுத்து சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,
வடிவேலு என் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவற்றில் உண்மை இல்லை. என் வளர்ச்சி வடிவேலுக்கு பிடிக்கவில்லை. என் மேல் அவருக்கு முன் விரோதம் உள்ளது.
எனவேதான் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை நான் சட்ட ரீதியாக நிரூபிக்க தயாராக இருக்கிறேன். போலீஸ் விசாரணைக்கும் ஒத்துழைப்பு கொடுக்க தயார்.
வடிவேலு புகாரில் எனது பெயர் தவறாக சேர்க்கப்பட்டு உள்ளது. தயாரிப்பாளர் கண்ணன், அவரது குழந்தையின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு அழைத்தார். அதை ஏற்று அங்கு சென்றேன்.
நானோ என்னுடன் வந்தவர்களோ வடிவேலு அலுவலகத்தில் புகுந்து எந்த பிரச்சினையும் செய்ய வில்லை. எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











