ஆபாசப் பேச்சு - நடிகை புகார்

கானல் நீர் படத்தில் நடித்தவர் சேத்னா. இதுதவிர சில கன்னடப் படங்களிலும் தலை காட்டியுள்ளார். தற்போது ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
போரூரை அடுத்துள்ள முகலிவாக்கத்தில் வசித்து வரும் சேத்னை, சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் பாலசுப்ரமணியத்திடம் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், நான் போரூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். அதற்கு அட்வான்ஸாக ரூ.75 ஆயிரம் கொடுத்துள்ளேன். இந்த நிலையில் வீட்டு உரிமையாளர் என்னை காலி செய்யும்படி கூறினார். ஆனால் அவர் முன் பணத்தை தர மறுத்ததால் நான் காலி செய்யவில்லை.
இந்த நிலையில் எனக்கு ஒரு மர்ம போன் வருகிறது. அதில் பேசும் வாலிபர், நீ அழகாக இருக்கிறாய், உனது புகைப்படம் பார்த்தேன். காரில் கடத்திச் ெசல்லப் போகிறேன் என்பது உள்பட ஆபாசமாக பேசி வருகிறார்.
எனவே எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றார்.
இதையடுத்து மாங்காடு காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்குமாறு சேத்னாவை, இணை ஆணையர் அறிவுறுத்தினார்.


Click it and Unblock the Notifications











