வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு

தமிழ் திரைப்பபட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் ராம நாராயணன் அணி வெற்றி பெற்றது. ராம நாராயணன் 3வது முறையாக தலைவரானார்.
புதிய நிர்வாகிகள் நேற்று மாலை பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் நாராயணன் பேசுகையில், எங்களை நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். உங்கள் ஆதரவுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் சில முடிவுகளை எடுத்து இருக்கிறோம்.
மூத்த தயாரிப்பாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த அன்புத்தொகை ரூ.2,500-ல் இருந்து இனி ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும். இயற்கை எய்திய தயாரிப்பாளர்களின் குடும்பத்துக்கு இதுவரை ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. அந்த தொகை இனி ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
சிறு பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை திரையிடுவதற்கு தியேட்டர் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில், இனிமேல் வாரத்துக்கு 3 படங்கள் மட்டும் வெளியிடப்படும். இந்த நடவடிக்கை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
தயாரிப்பாளர்களின் மகள் அல்லது மகன் திருமணங்களுக்கு உதவி தொகை ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
பையனூரில் திரைப்பட கலைஞர்களுக்காக கட்டப்படும் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி நடத்துவதற்கு முதல்வர் கருணாநிதி தேதி கொடுத்திருக்கிறார் என்றார்.


Click it and Unblock the Notifications











