25000 திருட்டு டிவிடிக்கள் பறிமுதல்; மூவர் கைது!
சென்னை: 25 ஆயிரம் திருட்டு டிவிடிக்கள் மற்றும் ஆபாச சிடிக்கள் வைத்திருந்ததாக மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மாநக காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், புதிய ஹாலிவுட் படங்கள் மற்றும் ஆபாச பட சிடிக்கள், டிவிடிக்களை கொண்டு வந்த மூன்று பேரை கைது செய்துள்ளோம். சீனாவில் தயாரிக்கப்பட்ட டிவிடிக்கள் இவை.
டெல்லி வழியாக இவை சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மொத்தம் 25000 டிவிடிக்கள் அடங்கிய பார்சல்களை கைமாறும்போதே பிடித்துவிட்டோம். இதில் 5000 ஆபாசப்பட டிவிடிக்களும் அடங்கும்.
இதுதொடர்பாக ஏகே சிங் என்பவர் உள்பட மூவர் கைதாகியுள்ளனர். இன்னொருவர் தப்பித்துவிட்டார். அவரையும் தேடி வருகிறோம்.
இதுவரா மாநிலத்தில் திருட்டு டிவிடி விற்போரில் 500 பேரைக் கைது செய்துள்ளோம். திருட்டு டிவிடி விற்பனைக்கு எதிரான போலீசாரின் அதிரடி தொடரும் என்றார்.
Comments
arrest அதிரடி சோதனை ஆபாச டிவிடிக்கள் கைது சினிமா தமிழ் திருட்டு வீடியோ போலீசார் cinema commissioner porno movies video piracy


Click it and Unblock the Notifications