twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்வதேச திரைப்பட விழா நடத்த ரூ.25 லட்சம்-ஜெயலலிதா வழங்கினார்

    By Mayura Akilan
    |

    Jaya gives Rs 25 lakh for expenses of CIFF
    சென்னை: சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்காக தமிழக அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஜெயலலிதா, இந்திய திரைப்பட திறனாய்வுக் கழக இயக்குனர் தங்கராஜிடம் வழங்கினார்.

    ஒன்பதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 14 முதல் 22ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விழாவில், 140 திரைப்படங்கள், ஒன்பது நாட்களில், ஐந்து தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளன.

    9 ஆம் ஆண்டு திரைப்பட விழா

    இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம், 2003ம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகளாக, "சென்னை சர்வதேச திரைப்பட விழா' என்ற பெயரில் டிசம்பர் மாதம் விழா நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒன்பதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் செலவுகளுக்காக, தமிழக அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஜெயலலிதா, இந்திய திரைப்பட திறனாய்வுக் கழக இயக்குனர் தங்கராஜிடம் வழங்கினார்.

    அப்போது, திரைப்பட நடிகர் சரத்குமார், நடிகை சுகாசினி, நடிகை லிசி ஆகியோர் உடனிருந்தனர். திரைப்பட விழாவை தலைமை வகித்து நடத்தித் தருமாறு, முதல்வரிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

    English summary
    The Tamil Nadu government today presented a sum of Rs 25 lakh towards expenses of the ninth edition of the Chennai International Film Festival (CIFF), scheduled here from December 14 to 22. Chief Minister Jayalalithaa presented a cheque for the amount to Indo Cine Appreciation Foundation chief Thangaraj at the secretariat here. The forum has been organising the film festival for the past eight years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X